சென்னையில், ‘கபாலி’ வசூலை மிஞ்சிய ‘விவேகம்’

தமிழ்த் திரையுலகத்தில் வசூல் சக்கரவர்த்தியாக இன்றும் இருப்பவர் ரஜினிகாந்த் மட்டுமே.

அவர் நடித்து கடைசியாக வெளிவந்த ‘கபாலி’ திரைப்படம் அதற்கு முந்தைய படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்தது.

வியாபாரம், வசூல் ஆகிய இரண்டிலும் ‘கபாலி’ படத்தின் வசூலை ரஜினி நடித்து அடுத்து வெளிவரும் ‘2.0’ படத்தால் மட்டுமே முறியடிக்க முடியும் என்று சொல்லி வந்தார்கள்.

ஆனால், சென்னையைப் பொறுத்தவரையில் ‘கபாலி’ படத்தின் வசூலை ‘2.0’ படம் வெளிவருவதற்கு முன்பாகவே இந்த வாரம் வெளிவந்த ‘விவேகம்’ படம் முறியடித்திருக்கிறது.

சென்னையில் ‘விவேகம்’ படத்தின் முதல் நாள் வசூல் 1.36 கோடி என்கிறார்கள். ஆனால், ‘கபாலி’ படத்தின் முதல் நாள் 1.12 கோடி மட்டுமே.

முதல் நாள் படத்தைப் பார்த்தவர்களின் கருத்துக்களாலும், விமர்சனங்களாலும் இரண்டாம் நாளில் படத்தின் வசூல் பாதிக்கும் என சிலர் சொன்னார்கள். அதையும் மீறி இரண்டாம் நாளில் வசூல் குறையாமல் ஏறி 1.50 கோடியை வசூலித்து திரையுலகினரை ஆச்சரியப்படுததியுள்ளது.

சென்னையில் இரண்டு நாளில் மொத்தமாக 2 கோடியே 86 லட்ச ரூபாய் வசூலித்துள்ளது. இது 137 தியேட்டர்களில் 565 காட்சிகள் மூலம் கிடைத்த வசூல்.

இன்றும், நாளையும் வசூலிக்கும் தொகையையும் சேர்த்தால் சென்னையில் மட்டும் நான்கு நாட்களில் இப்படம் 5 கோடி ரூபாய் வசூலைக் கடக்கும் வாய்ப்பு இருக்கிறது.

Read Previous

அசத்தலான ‘2.0’ தயாரிப்பு வீடியோ, தமிழ் சினிமாவின் பெருமை

Read Next

பரபரப்பை ஏற்படுத்தாத ‘2.0 மேக்கிங் வீடியோ’