150 கோடி வசூலைக் கடந்ததா ‘விவேகம்’ ?

சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்த ‘விவேகம்’ படம் கடந்த மாதம் 25ம் தேதி வெளியானது.

தமிழ், மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் முதல் நான்கு நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்தது. அதன் பின் வார நாட்களில் படத்தின் வசூல் கடுமையாகக் குறைந்தது.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 90 கோடி வசூலித்தால்தான் படம் லாபத்தைத் தரும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 75 கோடிகள் வரையே வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய மூன்று ஏரியாக்களில் மட்டும் ‘விவேகம்’ படம் லாபத்தைத் தரும் என்றும் மற்ற ஏரியாக்களில் சுமார் 15 சதவீதம் நஷ்டம் ஏற்படும் எனவும் திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

வேறு பெரிய படங்கள் எதுவும் வெளியாகாததால் படம் பெரியதாக வசூலிக்கவில்லை என்றாலும் இன்னும் பல தியேட்டர்களிலும் ‘விவேகம்’ படத்தையே ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அதனால், ‘விவேகம்’ படம் தற்போதுவரை சுமார் 150 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜிஎஸ்டி வரி இல்லாமல் இருந்திருந்தால் ‘விவேகம்’ படம் வசூலில் வெற்றிப் படம் என்றும் சொல்கிறார்கள். ஜிஎஸ்டி வரி விதிப்பிற்குப் பிறகும் இந்தப் படம் 150 கோடியை வசூலித்திருப்பது தமிழ்த் திரையுலகத்தில் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது என்றும் ஒரு சாரார் கருதுகிறார்கள்.

எப்படியிருந்தாலும் 2017ம் ஆண்டில் முதலில் 150 கோடியைக் கடந்த படம் என்ற பெருமை ‘விவேகம்’ படத்திற்கு உண்டு.

Read Previous

இன்று மாலை ‘மெர்சல் – மாச்சோ’ பாடல் வரிகள் வீடியோ

Read Next

‘மெர்சல்’ அமெரிக்க உரிமை 3.5 கோடி ?