விஜய் டிவி-யின் ஆயுத பூஜை, விஜயதசமி தின சிறப்பு நிகழ்ச்சிகள்

ஆயுத பூஜை, விஜயதசமி திருநாட்களை முன்னிட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள்…

ஆயுத பூஜை தினம் – செப்டம்பர் 29, வெள்ளிக் கிழமை

காலை 7 மணி – பக்தி இசை

காலை 8 மணி – ‘சோலோ’ திரைப்பட சிறப்பு நிகழ்ச்சி

நடிகர் துல்கர் சல்மான் ‘சோலோ’ படம் பற்றியும், அவருடைய திரைப் பயணம் பற்றியும் பேசுகிறார்.

காலை 9 மணி – சிறப்பு பட்டி மன்றம்

முதன் முறையாக பெண் பேச்சாளர்கள் மட்டுமே பங்கேற்கும் பட்டிமன்றம். பெண்ணின் வெற்றியை தீர்மானிப்பது குடும்பமா ?, சமுதாயமா ?, தனித் தன்மையா ?, என்ற தலைப்பில் பேசுகின்றனர்.

காலை 10 மணி – ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ – திரைப்படம்

ஐக் இயக்கத்தில் ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி மற்றும் பலர் நடித்துள்ள புத்தம் புதிய திரைப்படம்

மதியம் 1 மணி – விஜய் குடும்பம்

விஜய் தொலைக்காட்சியில் கூடிய விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் இரண்டு தொடர்களான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ மற்றும் ‘சின்னத் தம்பி’ ஆகிய தொடர்களின் நட்சத்திரங்கள் அமித், சரண்யா, நிஷா, பவனி ப்ரஜன் ஆகியோருடன் சூப்பர் சிங்கர் நட்சத்திரங்களும் பங்குபெறும் சிறப்பு நிகழ்ச்சி தம் இந்த விஜய் குடும்பம். முற்றிலும் மகிழ்ச்சி அளிக்கும் பல சுற்றுகளுடைய இந்த நிகழ்ச்சியை காணுங்கள்.

மதியம் 3 மணி – ரெடி டேக் ஆக்ஷன்

பல சாகசங்கள் நிறைந்த உற்சாகமூட்டும் ஒரு நிகழ்ச்சி. மன அளவிலும் உடல் அளவிலும் சவாலாக அமையும் பல விளையாட்டுகளை விஜய் தொலைக்காட்சியின் நட்சத்திர ஜோடிகள் எப்படி கையாளுகிறார்கள் என்பதை காணுங்கள்.

மாலை 4.30 – ஸ்பைடர் SPI

ஸ்பைடர் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகும் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி.

விஜயதசமி தினம் – செப்டம்பர் 30 – சனிக் கிழமை

காலை 9 மணி – நேருக்கு நேர்

திருநெல்வேலியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மத்தியில் நடிகர் சிவக்குமார் அளித்த சிறப்புரை

காலை 10 மணி – ப. பாண்டி – திரைப்படம்

தனுஷ் இயக்குனராக அறிமுகமான ப. பாண்டி திரைப்படம். ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா மற்றும் பலர் நடித்துள்ள படத்தை முதன் முறையாக டிவியில் ஒளிபரப்பு

மதியம் 1 மணி – அதிரடி கிச்சன்

வெங்கடேஷ் பட், செப் தாமு அவர்களின் கீழ் இரண்டு டிவி நட்சத்திரங்கள் பங்கு பெறும் சமையல் போட்டி

மதியம் 2.30 மணி – நீங்க ஷட் அப் பண்ணுங்க

கிங்ஸ் ஆப் காமெடி, கலக்கப் போவது யாரு நிகழ்ச்சிகளின் நட்சத்திரங்கள் மோதிக் கொள்ளும் சிரிப்பு சரவெடி

மாலை 4 மணி – சரவணன் இருக்க பயமேன்

எழில் இயக்கத்தில், இமான் இசையமைப்பில் உதயநிதி ஸ்டாலின், ரெஜினா கசன்ட்ரா, சூரி மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம்.

Read Previous

‘ஜுங்கா’ படம் வியாபாரம் நிறைவு

Read Next

இப்படை வெல்லும் – டீசர்