பெரும் கூட்டணியில் உருவாகும் ‘மிஸ்டர் சந்திரமௌலி‘

நடிகர் கார்த்திக் அவருடைய மகன் கௌதம் கார்த்திக் இருவரும் முதன் முறையாக இணைந்து நடிக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’.

கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் டிஸ்டிரிபியூட்டர்ஸ் சார்பாக தனஞ்செயன் தயாரிக்கும் இந்தப் படத்தை திரு இயக்குகிறார்.

இப்படத்தில் ஒரு பெரும் கூட்டணி இணைந்துள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குனர்களான இயக்குனர் மகேந்திரன், ‘காதல் கோட்டை’ இயக்குனர் அகத்தியன் இருவரும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

கதாநாயகியாக ரெஜினா கசன்ட்ராவும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சமியும் நடிக்க உள்ளார்கள். நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் சதீஷ் நடிக்கிறார்.

‘மௌன ராகம்’ படத்தில் கார்த்திக் அவருடைய காதலி ரேவதியின் அப்பா ரா.சங்கரன்-ஐ ஒரு ரெஸ்டாரென்டில் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ எனக் கூப்பிடும் காட்சி அவ்வளவு பிரபலமான ஒன்று.

படம் பற்றி இயக்குனர் திரு கூறியதாவது,

”இப்படத்தின் நடிகர்கள் கூட்டணி படத்திற்கு தூணாக அமைந்து படத்தை அடுத்த லெவெலுக்கு கொண்டு போயுள்ளது. இயக்குனர் மகேந்திரன் சார், கார்த்திக் சார் மற்றும் அகத்தியன் சார் போன்ற ஜாம்பவான்களோடு பணிபுரிய வாய்ப்பு கிட்டியுள்ளதை நினைத்தால் மிக பெருமையாக உள்ளது. எனது பொறுப்பு பல மடங்கு கூடியுள்ளது என்பதை நன்கு அறிவேன். படத்தின் இந்த தலைப்பு எங்களுக்கு பெரும் பலத்தைக் கொடுத்துள்ளது,” என்கிறார் திரு.

விரைவில் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

Read Previous

‘அவள்’ படத்தைப் பார்க்க மாட்டேன், அதிர்ச்சி தந்த ஆன்ட்ரியா

Read Next

‘2.0’, இன்று கடைசி பாடல் படப்பிடிப்பு

Most Popular