தீபாவளி தினத்தை முன்னிட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதிய திரைப்படங்கள்
அக்டோபர் 18, 2017 – புதன் கிழமை
காலை 7 மணி – பக்தி இசை
காலை 8 மணி – அண்ணாதுரை – ஸ்பெஷல்
விஜய் ஆன்டனி நடிப்பில் வெளிவர உள்ள ‘அண்ணாதுரை’ படக்குழுவினருடன் ஒரு நேர்காணல்
காலை 9 மணி – பட்டிமன்றம்
பண்டிகையின் நோக்கம் தனி மனித மகிழ்ச்சியா? அல்லது சமூகத்தின் மகிழ்ச்சியா?, நடுவர் சுகி சிவம் தலைமையில் நடைபெற்ற சிரிக்க மற்றும் சிந்திக்க வைக்கும் சிறப்புப் பட்டிமன்றம்.
காலை 10 மணி – மாநகரம் – புத்தம் புதிய திரைப்படம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா, சார்லி மற்றும் பலர் நடித்துள்ள புத்தம் புதிய திரைப்படம்
பிற்பகல் 1 மணி – விஜய் ஸ்டார்ஸ்
ஆலியா மானசா, சஞ்சீவ், ரியோ, ப்ரஜன், மீனா நந்தினி, சுனிதா, மணி மற்றும் பெலினா என விஜய் டிவியின் நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பித்த கலகலப்பான நிகழ்ச்சி.
பிற்பகல் 3.30 மணி – எங்கள் தோழன் கார்த்தி
கார்த்தியுன் தொகுப்பாளர் ரம்யா கலகலப்பாக கலந்துரையாடுகிறார்.
மாலை 5 மணி – தல தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி
விஜய் தொலைக்காட்சியின் ஜோடிகள் ரியோ – சுருதி , சூப்பர் சிங்கர் புகழ் சத்யா பிரகாஷ் மற்றும் அவர் மனைவி, சிரிச்சா போச்சு தங்கதுரை மற்றும் அவர் மனைவி என தலை தீபாவளி கொண்டாடும் ஜோடிகளுடன் கலகலப்பான ஒரு கொண்டாட்டம்.
மாலை 6 மணி – பாகுபலி 2
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் மரகதமணி இசையமைப்பில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் மற்றும் பலர் நடித்துள்ள பிரம்மாண்டமான சரித்திரப் படம்.