நவம்பர் 8ம் தேதி ‘எம்ஜிஆர்’ வாழ்க்கை வரலாறு படம் ஆரம்பம்

‘காமராஜ் – தி கிங் மேக்கர், முதல்வர் மகாத்மா’ ஆகிய திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாகத் தயாரிக்கிறது.

எம்.ஜி.ஆரின் வரலாறு அவரது பாய்ஸ் நாடகக் கம்பெனி காலங்களில் ஆரம்பித்து, அவரின் திரையுலக வாழ்க்கை, அண்ணாவுடன் சந்திப்பு, அரசியல் வாழ்க்கை, பின் தமிழக முதல்வராய் உயர்ந்தது வரை படமாக்கப்படுகிறது.

எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிப்பு மட்டுமின்றி பல்துறை வல்லுனராக இருந்தார். அவையனைத்தும் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட இருக்கிறது.

ஏழை எளிய மக்களின் கதாநாயகராக, மக்கள் திலகமாக விளங்கிய  எம்.ஜி.ஆர். வரலாற்றுத் திரைப்படம், அவரின் நூற்றாண்டு விழாவிற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமைய உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பை நவம்பர் 8, புதன்கிழமை அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைக்க உள்ளார். விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், திரைத்துறை பிரமுகர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பிக்கிறார்கள்.

ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் அ.பாலகிருஷ்ணன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

Read Previous

‘மெர்சல்’, 6வது 100 கோடி கிளப்பில் விஜய்

Read Next

உண்மையாகவே பயமுறுத்தி நடுங்க வைக்கும் படம் ‘அவள்’