சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில், மிலிண்ட் ராவ் இயக்கத்தில் உருவாக்கியுள்ள பேய் படம் ‘அவள்’.
வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ், ஏடகி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.
இப்படம் வெளியிடுவது பற்றி டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் பேசுகையில்,
”உண்மையாகவே பயமுறுத்தி நடுங்க வைக்கும் படம் தான் ‘அவள்’. ஹாலிவுட் ஹாரர் படங்களுக்கு இணையாகப் இப்படம் உள்ளது என உறுதியாகக் கூறலாம். பல விதமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் துணிச்சலாக ஏற்று நடித்து ஜொலிப்பவர் நடிகர் சித்தார்த். நவம்பர் 3 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள ‘அவள்’ தமிழ் சினிமா ரசிகர்களை திகிலில் உறைய வைப்பது நிச்சயம்,” என்கிறார் அவர்.
இப்படத்தின் திரைக்கதையை இயக்குனர் மிலிண்ட் ராவுடன் சேர்ந்து நடிகர் சித்தார்த்தும் எழுதியுள்ளார். நடிகர் அதுல் குல்கர்னி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இசையில், ஷ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் ‘அவள்’ உருவாகியுள்ளது.