200 கோடியைக் கடந்தது ‘மெர்சல்’ ?

தீபாவளியன்று வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் நேற்று 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்தது. விரைவில் ‘எந்திரன்’ படத்தின் தமிழ்நாட்டு வசூலையும் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது அடுத்த சாதனையாக 200 கோடி ரூபாயைக் கடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் திரையுலகத்தில் இதுவரை ‘எந்திரன்’ படம் மட்டுமே 200 கோடி ரூபாயைக் கடந்துள்ளது. ‘மெர்சல்’ படமும் அடுத்து 200 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

தமிழ்நாட்டில் 100 கோடி ரூபாயும், கேரளாவில் 18 கோடி ரூபாயும், கர்நாடகாவில் 13 கோடியும் வசூலித்து பக்கத்து மாநிலங்களிலும் புதிய சாதனையைப் படைக்க உள்ளது. ஆந்திரா, தெலுங்கானாவில் முன்னர் அறிவித்தபடி இப்படத்தின் தெலுங்குப் பதிப்பான ‘அதிரிந்தி’ வெளியாகியிருந்தால் அங்கும் பெரிய வசூல் சாதனையை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது.

வெளிநாடுகளில் சுமார் 70 கோடி ரூபாயை இப்படம் கடந்துள்ளதாகத் தெரிகிறது. அமெரிக்கா, மலேசியா, அரபு நாடுகளில் தலா 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

‘மெர்சல்’ படத்தின் வசூல் இந்த வாரமும் இப்படியே தொடர்ந்தால் ‘எந்திரன்’ படத்தின் வசூலை முறியடித்து முதலிடத்தைப் பிடிக்கும் என திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

Read Previous

‘காலா’ பொங்கல் வெளியீடு அல்ல, அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Read Next

இப்படை வெல்லும் – டிரைலர்