முகவரி இல்லாமல் இருந்த பலருக்கு சரியான முகவரியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி.
சாதாரண ஹீரோயினாக இருந்த ஓவியா, இன்று பாப்புலரான நடிகையாகவிட்டார். நயன்தாராவை விடவும் அவருக்கு மவுசு அதிகம்.
இன்னும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும், அடுத்தடுத்து புதிய வாய்ப்புகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
ஜுலி கூட கலைஞர் டிவியில் தொகுப்பாளராகிவிட்டார். இப்படி பலருக்கும் புதிய வாய்ப்புகள் வந்து அவர்களது வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது.
ஓவியாவிற்கு அடுத்து இளைஞர்களின் மனதைக் கவர்ந்தவராக அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ரைசா இருந்தார். அவர் ஏற்கெனவே தனுஷ், அமலா பால் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் கஜோலின் பி.ஏ.வாக நடித்திருந்தார்.
இப்போது ரைசாவுக்கு ஹீரோயின் ஆக பிரமோஷன் கிடைத்துள்ளது. ‘கிரகணம்’ என்ற படத்தை இயக்கியுள்ள இளன் என்பவர் இயக்க உள்ள புதிய படத்தில் ரைசா நாயகியாக நடிக்க உள்ளார். இப்படத்தின் நாயகனாக பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் ‘பொறியாளன், வில் அம்பு’ படங்களில் நாயகனாக நடித்த ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ளார்.
நவம்பர் 5ம் தேதி இந்தப் படத்தின் முதல் பார்வை வெளியாக உள்ளது.