நயன்தாரா நாயகியாக நடித்துள்ள ‘அறம்’ படம் நேற்று வெளியானது. படத்திற்கு விமர்சகர்கள் தரப்பிலிருந்தும் ரசிகர்கள் தரப்பிலிருந்தும் பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பொதவாக நயன்தாரா அவர் நடிக்கும் படங்களின் எந்த ஒரு பிரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார். அப்படியிருக்க, மதியம் திடீரென ‘அறம்’ திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும் சென்னை தியேட்டர்கள் சிலவற்றிற்கு படக் குழுவினருடன் திடீர் விசிட் அடித்துள்ளார்.
காசி தியேட்டர், உதயம் தியேட்டர், ரோகிணி தியேட்டர், கமலா தியேட்டர் ஆகிய தியேட்டர்களுக்குச் சென்று படம் பற்றிய கள நிலவரங்களை நேரில் அறிந்து கொண்டார்.
இப்படத்தின் இயக்குனர் கோபி நயினாருக்கு வாய்ப்பும் கொடுத்து, இந்தப் படத்தை நல்ல விதமாக ஓட வைப்பதற்காக தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், அதை செயலிலும் காட்டியிருக்கிறார்.
‘அறம்’ போன்ற சமூகச் சிந்தனையுடன் கூடிய படத்தைத் தேர்வு செய்து நயன்தாரா நடித்திருப்பது பல ஹீரோக்களுக்கும் ஆச்சரியம் அளிப்பதாக இருந்திருக்கும்.
நயன்தாரா தியேட்டர்களுக்குச் சென்றதும் செய்தியாகி, படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.