‘இதயனே….’ பாடலின் இனிமையைச் சொல்லும் மதன் கார்க்கி

‘வேலைக்காரன்’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘இதயனே….’ பாடல் இனிமையான ஒரு பாடலாக அமைந்து ரசிகர்களைத் தன்வசப்படுத்தியுள்ளது.

பாடல் பற்றி பாடலை எழுதிய மதன் கார்க்கி கூறுகையில்,

“காதல் பாடல் எழுதுவது என்பது எப்போதுமே சவாலான விஷயம். பாடல் வரிகள் மிகவும் சாதாரணமாகவும், அதே சமயம் ரசிகர்களை உடனடியாகக் கவரும் விதமாகவும் இருக்க வேண்டும். இரு ஆன்மாக்கள் உண்மையான காதலின் தேடலில் இருக்கும்போது இணைந்து, வழிந்தோடும் அழகான கவிதை பிறப்பதை பற்றி பேசுகிறது இதயனே பாடல்.

இருள், பொய்கள் மற்றும் எதிர்மறையான விஷயங்களை நேர்மறையான ஒளி அழிப்பதை பாடல் வரிகள் வலியுறுத்த வேண்டும். அனிருத் எப்போதுமே பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அவரின் லேசான வாத்தியமும், சிறப்பான இசையும் பாடலை வேறு தளத்துக்கு நகர்த்திச் சென்று விடும்.

சிவகார்த்திகேயன், அனிருத் இணை, இசை ரசிகர்களுக்கு சிறந்த காதல் பாடல்களை அயராது பரிசளித்திருக்கிறார்கள். இதுவும் என்னுடைய பொறுப்பை உணர்த்தி, அவர்களின் வெற்றியைக் தக்க வைக்க கடுமையான உழைப்பைக் கொடுக்க என்னை உந்தியது,” என்கிறார் மதன் கார்க்கி.

Read Previous

மக்களை விழிப்படைய வைக்க வரும் ‘களிறு’

Read Next

தமிழ் சினிமா 2017 – அதிகப் படங்களில் நடித்தவர் யார் ?