இயக்குனராக இருந்து நடிகரான சமுத்திரக்கனி தற்போது அதிகப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் தனி கதாநாயகனாக நடிக்கும் படங்களும் உண்டு.
சசிகுமார் நாயகனாக நடித்த ‘நாடோடிகள், போராளி’ ஆகிய படங்களை இயக்கிய சமுத்திரக்கனி சமீபத்தில் ‘அப்பா, தொண்டன்’ ஆகிய படங்களை இயக்கியிருந்தார். 2009ம் ஆண்டு வெளிவந்த ‘நாடோடிகள்’ படம் பெரிய வெற்றியைப் பெற்ற படமாக அமைந்தது.
இப்போது மீண்டும் சசிகுமார் நாயகனாக நடிக்க ‘நாடோடிகள் 2’ படத்தை இயக்க உள்ளார்.
இப்படத்தை நாடோடிகள், இன்ஸ்பெயர் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.
படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. விரைவில் ‘நாடோடிகள் 2’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.