‘டிராபிக் ராமசாமி’ படத்திற்காக இமான் அண்ணாச்சி நடனம்

டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்க ‘டிராபிக் ராமசாமி’ என்ற பெயரிலேயே படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதில் நகைச்சுவையான அரசியல்வாதியாக, இமான் அண்ணாச்சி நடிக்கிறார்.

“சாராய மண்டைய மண்டைய
குண்டக்க மண்டக்க, நெஞ்சுல சாத்திக்க
ஜவ்வாது இவ நெஞ்சுல பூசிக்க
வாடா மச்சான்“

என்ற கபிலன் வைரமுத்து எழுதிய பாடலுக்கு இமான் அண்ணாச்சி, சசிரேகா என்ற நடிகையுடன் நடனமாடி நடித்த பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.

நகைச்சுவை வேடங்களில் நடித்து வரும் இமான் அண்ணாச்சி முதல் முறையாக நடனமாடிய பாடல் இது. அவருடைய நடனத்தைப் படப்பிடிப்புத் தளத்தில் இருந்த அனைவரும் பாராட்டினார்கள்.

இது பற்றி இமான் அண்ணாச்சி கூறியதாவது, “எனக்குள் இப்படி ஒரு நடனத் திறமை இருப்பதை இப்போது தான் நான் புரிந்துகொண்டேன். இந்தப் படத்தின் காட்சிகளிலும், பாடலிலும் என்னை இயக்குனர் மிக அட்டகாசமாகப் பயன்படுத்தி இருக்கிறார். இனிவரும் படங்களில் இளைய தளபதி விஜய், சிவகார்த்திகேயன் நடனத்தில், போட்டி போட முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது,” என்றார்.

இப்பாடலுக்கு ‘கும்கி, கயல், ஆர்யா-2, பஜ்ரங்கி பாய்ஜான்’ போன்ற படங்களுக்கு நடனம் அமைத்த நோபுள் நடனம் அமைத்துள்ளார். பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் இருக்கிறது.

Read Previous

‘ஸ்கெட்ச்’ கதையைக் கேட்டதும் பிடித்தது – விக்ரம்

Read Next

எம்ஜிஆர் பட விழா, ஒரே மேடையில் ரஜினி, கமல்

Most Popular