கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்

‘பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், தற்போது பிரபுதேவா நடிக்கும் ‘மெர்க்குரி’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.

இது பற்றிய அறிவிப்பை சன் பிக்சர்ஸ் சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ், ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகரும் கூட. பா. ரஞ்சித் இயக்கிய ‘கபாலி, காலா’ படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் மீண்டும் ஒரு இளம் இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளார். அதனால், அவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொள்வார் என்று பேசப்பட்டது. ஆனால், அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவெடுத்திருப்பது ஆச்சரியமான ஒன்று.

இந்தப் படம் பற்றி மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

 

Read Previous

விஜய் டிவியில் ‘கிங்ஸ் ஆஃப் டான்ஸ் சீசன் 2’ இறுதிச் சுற்று

Read Next

தென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com