ஸ்ரீதேவி மரணம், மீடியாக்கள் எழுப்பும் கேள்விகள்

இந்தியத் திரையுலகினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம்.

முதலில் அவரது மரணம் மாரடைப்பால் நிகழ்ந்தது என்று செய்திகள் வெளியாகின. நேற்று துபாய் மருத்துவத் துறை அறிக்கையில் அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கிறார் என்று வெளியானது. அதன் அடிப்படையில் ஸ்ரீதேவி மரணம் குறித்து நேற்று முதலே பல்வேறு சந்தேகங்கள் மீடியாக்களில் எழுந்தது.

உண்மை நிலவரம் என்ன என்பதை எடுத்துச் சொல்லத்தான் மீடியாக்கள் உள்ளன. ஆனால், சிலர் மீடியா எழுப்பும் கேள்வி குறித்தே பல்வேறு விமர்சனங்களை வைத்துள்ளனர்.

1. போனி கபூர் ஹோட்டல் அறைக்குள் நுழைந்த நேரம் முதல் போலீசுக்குத் தகவல் தெரிவித்த இடைபட்ட நேரத்தில் என்ன நடந்தது ?.

2. மரணம் எப்போது நிகழ்ந்தது, போனி கபூர் எப்போது காவல் துறையை அழைத்தார் ?.

3. குளியலறையில் இருந்த ‘பாத்-டப்’பில் தண்ணீர் முழுவதுமாக இருந்ததா ?.

4. குளியலறைக் கதவுகள் திறந்தே இருந்ததா ? , கபூர் அவற்றை எவ்வாறு திறந்தார் ?.

5. ஸ்ரீதேவி குடித்திருந்தார் என்றால், அறையில் மது பாட்டில்களும், மது கோப்பைகளும் அறையில் இருந்ததா ?

6. குளியலறையில் தண்ணீர் வழிந்திருந்ததா, சிதறி இருந்ததா ?.

7. கீழே விழுந்திருந்தார் என்றால் தலையில் அடிபட்டிருந்ததா ?

8. ஸ்ரீதேவியின் தொலைபேசி அழைப்புகள் ஆராயப்பட்டதா ?

போன்ற கேள்விகள் மீடியாக்களில் பரவலாக எழுப்பப்பட்டுள்ளன.

இந்த கேள்விகள் குறித்த கோணங்களிலும் துபாய் போலீஸ் தரப்பில் விசாரணை நடந்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீதேவி இந்தியாவில் பிரபலமான நடிகையாக இருந்ததால் 100 சதவீதம் எந்தவிதமான சந்தேகமும் போலீஸ் தரப்பில் இல்லாமல் இருக்கும்பட்சத்தில்தான் அவருடைய உடல் இந்தியாவிற்கு அனுப்பப்படும் என்கிறார்கள்.

இன்று இரவுக்குள் இந்த விசாரணை முடிவடைந்தால் அதன் பின் ‘எம்பாமிங்’ செய்ய அனுமதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன் பிறகே ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவிற்கு வரும்.

Read Previous

அதுல்யா நடிக்கும் ‘என் பெயர் ஆனந்தன்’

Read Next

ஸ்ரீதேவி உடலுக்கு துபாய் அரசு அனுமதி சான்றிதழ்