ஸ்ரீதேவி உடலுக்கு துபாய் அரசு அனுமதி சான்றிதழ்

நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமையன்று துபாயில் திடீரென மரணம் அடைந்தார். அதன் பிறகு அவருடைய உடலை அங்கிருந்து இந்தியா எடுத்து வருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

துபாய் காவல் துறை நேற்று மரணம் குளியலறையில் நீரில் மூழ்கியதால் நிகழ்ந்திருக்கிறது என்று அறிக்கை வெளியிட்டது. அதன் பின் துபாய் சட்டத் துறை அனுமதி வழங்க வேண்டியிருந்தது. ஆனால், அதற்குக் கால தாமதம் ஆனது.

சற்று முன்னர்தான் அவர்கள் அதற்கான அனுமதியை வழங்கினார்கள். அதையடுத்து அவருடைய உடலை அவரது குடும்பத்தினர் எம்பாமிங் செய்வதற்காக மருத்துவமனைக்கு உடலை எடுத்துச் செல்கிறார்கள்.

சில மணி நேரங்களில் அது முடிவடைந்த பின் அவருடைய உடலை தனி விமானம் மூலம் இந்தியா கொண்டு வருகிறார்கள்.

ஸ்ரீதேவியின் உடலுக்கு அனுமதி அளித்தது குறித்து துபாயில் உள்ள இந்தியத் தூதரம் டிவிட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்று மாலை அல்லது இரவுக்குள் ஸ்ரீதேவியின் உடல் இந்தியா வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீதேவியின் உடலுக்கு சம்பந்தப்பட்ட அரசுத் துறையினர் அனுமதி அளித்ததை அடுத்து ஸ்ரீதேவியின் மரணம் குறித்த சர்ச்சை முடிவுக்கு வருகிறது.

ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கு நாளை காலை மும்பையில் நடைபெறலாம்.

Read Previous

ஸ்ரீதேவி மரணம், மீடியாக்கள் எழுப்பும் கேள்விகள்

Read Next

நாளை ஸ்ரீதேவி-யின் இறுதிச் சடங்கு, குடும்பத்தினர் அறிவிப்பு