பலத்த எதிர்ப்பு, ‘ஸ்தாபகம்’ வார்த்தையை நீக்கிய கமல்ஹாசன்

கமல்ஹாசன் பயன்படுத்தும் பல தமிழ் வார்த்தைகளுக்கு அகராதியைத் தேடித்தான் அர்த்தம் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். அந்த அளவிற்கு குழப்பமான வாக்கிய அமைப்பில்தான் அவருடைய தமிழ் பயன்பாடு இருக்கும்.

டிவிட்டரில் தொடர்ந்து தமிழ் வார்த்தைகளைத் தப்பும் தவறுமாக டைப் செய்துவிட்டு, அவருடைய மொபைல் போன் மீது குற்றம் சாட்டியவர்தான் கமல்ஹாசன்.

அவருடைய கட்சி பெயரில் கூட ‘மக்கள் நீதி மய்யம்’ என்று இருப்பதில் ‘மய்யம்’ என்பதற்கு என்ன அர்த்தம் எனப் பலரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதனிடையே, இன்று காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் மறைவு பற்றி மக்கள் நீதி மய்யம் சார்பா வெளியிட்ட அறிக்கையில் ‘ஸ்தாபகத் தலைவர், மக்கள் நீதி மய்யம்’ என்று அறிக்கை வெளியாகியிருந்தது.

அதற்கு தமிழ் ஆர்வலர்கள், தமிழ் மக்கள் பலரும் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

அதைத் தொடர்ந்து சற்று முன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது குறித்து ‘மக்கள் நீதி மய்யம்’ சார்பில் வெளியிட்ட அறிக்கையில் ‘ஸ்தாபகம்’ என்பதை நீக்கி விட்டு வெறும் ‘தலைவர், மக்கள் நீதி மய்யம்’ என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

தமிழ் மக்களின் பலத்த எதிர்ப்புக்குப் பிறகு உடனடியாக தன்னைத் திருத்திக் கொண்டுள்ளார் கமல்ஹாசன்.

முதலில் ‘ஸ்தாகத் தலைவர்’ என்று குறிப்பிட்டு வெளியிட்ட அறிக்கை….

பின்னர் ‘தலைவர்’ என்று குறிப்பிட்டு வெளியிட்ட வேறொரு அறிக்கை….

Read Previous

கர்நாடக முதல்வரிடம் விருது பெறும் மணிரத்னம்

Read Next

உறவினர் அனிருத்துக்கு ரஜினிகாந்த் கொடுத்த வாய்ப்பு