ராஜமௌலி இயக்கத்தில் கீரவாணி இசையமைப்பில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் ஏப்ரல் 28ம் தேதி வெளிவந்த படம் ‘பாகுபலி 2’.
இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தன. ஒவ்வொரு பாடலுமே பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
‘சாஹேரே பாகுபலி’ என்ற பாடல் தெலுங்குப் பாடல் யு டியூபில் கடந்த வருடம் மே மாதம் வெளியிடப்பட்டது. ஒரு வருடங்களுக்குள்ளாகவே அந்தப் பாடல் 10 கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.
தென்னிந்திய அளவில் யு டியூபில் வெளியான ஒரு பாடல் 10 கோடி பார்வைகளைக் கடப்பது இதுவே முதல் முறை.
அப்பாடலின் தமிழ்ப் பாடல் 4 கோடி பார்வைகளையும், ஹிந்திப் பாடல் 6 கோடிகளையும் கடந்துள்ளன.
மொத்தமாக மூன்று மொழிகளையும் சேர்த்தால் 20 கோடி பார்வைகளை அந்த ஒரு பாடல் மட்டுமே பெற்றுள்ளது.
அப்படிக் கணக்கு பார்த்தால் இந்தியத் திரையுலகத்தில் வேறு எந்தப் பாடலும் 20 கோடிப் பார்வைகளைப் பெற்றிருக்க வாய்ப்பில்லை.
‘பாகுபலி 2’ படத்தின் மிகப் பெரும் சாதனை இது.
பாகுபலி 2 – சாஹோரே பாகுபலி – தெலுங்கு பாடல்
பாகுபலி 2 – பலே பலே பாகுபலி – தமிழ்ப் பாடல்
https://youtu.be/hDyoDTuf0Pc
பாகுபலி 2 – ஜியோ ரே பாகுபலி – ஹிந்திப் பாடல்