சினிமாவில் நடிக்கும் விஜய் டிவி ரக்ஷன்

டிவி தொகுப்பாளர்கள் சினிமாவிற்கு நடிக்க வந்து முன்னணி நட்சத்திரங்களாகவும் மின்னிக் கொண்டிருக்கிறார்கள்.

த்ரிஷா கூட டிவியில் தொகுப்பாளராக இருந்தவர்தான். சிவகார்த்திகேயன், சந்தானம் என பலரையும் அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அந்த வரிசையில் தற்பொழுது விஜய் டிவி ரக்ஷன் இணைந்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அவர் இருக்கிறார்.

துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.

தனது முதல் பட வாய்ப்பு குறித்து ரக்ஷன் கூறுகையில்,

“நடிப்பில் சாதிக்க வேண்டும் என்பது என்றுமே எனது கனவாகும். ஒரு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்த வேளையில் தான் எனக்கு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது போன்ற மிகச் சிறப்பான கதையிலும் கதாபாத்திரத்திலும் நான் நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

இந்தப் படத்தில் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் நகைச்சுவை கலந்த சுவாரசியமான கதாபாத்திரமாகும். இந்த வாய்ப்பை எனக்குத் தந்த இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மிகப் பெரிய நட்சத்திரமாகவும் ஒரு ஸ்டாரின் மகனாகவும் இருந்தாலும் துளிகூட பந்தாவே இல்லாமல் மிக எளிமையாக பழகக் கூடியவர் துல்கர் சல்மான்.

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக இருக்கும் என நம்புகிறேன்,” என்கிறார் ரக்ஷன்.

Read Previous

எழுவாய் தமிழா, இசை வெளியீட்டு விழா

Read Next

பெண்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வரும் ‘எக்ஸ் வீடியோஸ்’