காலா – தமிழில் டப்பிங் பேசினாரா நானா படேகர் ?

இந்தியத் திரையுலகமே வியந்து பார்க்கும் உன்னதமான நடிகர் நானா படேகர்.

தமிழில் 2008ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘பொம்மலாட்டம்’ படத்தில் நடித்தார். பொதுவாக அதிகமான கமர்ஷியல் படங்களில் நடிக்காதவர். ஆனால், ‘காலா’ படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்க சம்மதித்தது ஆச்சரியம்தான்.

படத்தின் டீசரில் அவர் ஒரு அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று தெரிந்து கொள்ள முடிகிறது.

‘காலா’ படம் தமிழில் நேரடியாக எடுக்கப்பட்டு ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

தமிழ் மற்றும் ஹிந்தியில் நானா படேகர் அவருடைய குரலில் டப்பிங் பேசியதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஹிந்தி நடிகர் தமிழ் பேசி நடித்திருப்பது ஆச்சரியம்தான். நடிப்பு மீது தனக்கிருக்கும் ஆர்வத்தை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் நானா படேகர்.

Read Previous

எழுமின், சாதிக்கத் துடிக்கும் சிறுவர்களின் கதை

Read Next

வில்லா டு வில்லேஜ், விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி