எம்.எஸ். ஆனந்த் இயக்கத்தில் வினோத் கிஷன், டேனியல் பாலாஜி, சசிகுமார், மிஷா கோஷல், நீலிமா ராணி, ரக்ஷனா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘யாழ்’.
இப்படம் கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளிவந்தது. அப்போது படத்திற்கு சரியான தியேட்டர்கள் கிடைக்காததால், படத்தை மீண்டும் கடந்த வாரம் வெளியிட்டார்கள்.
கடந்த முறை வெளியான போதே படத்தைப் பார்க்க வேண்டும் என்று தவித்தவர்களுக்கு தற்போது படத்தை மீண்டும் படத்தைப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
திரையிட்ட இடங்களில் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படத்திற்கு ஒவ்வொரு நாளும் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துக கொண்டே வருகிறதாம்.
மக்களின் வரவேற்பால் படத்தின் இயக்குனர் எம்.எஸ். ஆனந்த் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்.