விஜய் டிவியில் சமீபத்தில் ஆரம்பமான புதிய தொடர் ‘அவளும் நானும்’.
நிலா மற்றும் தியா என்னும் இரட்டை சகோதரிகளைப் பற்றியது இந்தத் தொடர். இந்தத் தொடரில் நிலாவின் திருமணம் பணக்கார வீட்டை சேர்ந்த பையன் ப்ரவீனுடன் நிச்சயிக்கப்படுகிறது. வேறொருவரை விரும்பும் நிலா, தன் பெற்றோரை சம்மதிக்க வைக்க முடியாமல் போன நிலையில் திருமணத்தின் போது ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டுச் செல்கிறார்.
குடும்பப் பெயரை காப்பாற்ற தியாவை நிலாவாக நிறுத்தி திருமணம் செய்து வைக்கிறார் தந்தை. தற்பொழுது நிலாவாக மாறி பிரவீனை திருமணம் செய்திருக்கும் தியாவிற்கு தனது காதலன் அரவிந்தை ஏமாற்றி விட்டதாக ஒரு புறம் தோன்றுகிறது, மற்றொரு புறம் நிலவாக தன்னை நினைத்து தன் காதல் முழுவதையும் பொழியும் பிரவீனிடம் தான் யார் என்பதை சொல்ல முடியாமல் போகும் குற்றவுணர்ச்சி. இவற்றிற்கிடையில் சிக்கி தவிக்கிறார் தியா.
இதையடுத்து அரவிந்த், தியாவை பிரவீனிடம் இருந்து விலகி வருமாறு சமாதானம் செய்ய முயற்சிக்கிறான். தியா என்ன கூறப்போகிறார்?
மற்றொருபக்கம், நிலாவின் காதலன் விஜய் வீட்டில் அவருக்கு பெரிய வரவேற்பு இல்லை, விஜய்யின் பாட்டி அவளை கடுமையாக எச்சரிக்கிறார், நிலா அடுத்து என்ன செய்ய போகிறார்?
உருவங்கள் இடம் மாறின வாழ்கை தடம் மாறுகிறது. இதுவே இந்தக் கதையின் முக்கிய கரு.
இந்தத் தொடரின் இயக்குனர் ராஜ தனுஷ். நடிகை மௌனிகா இந்தத் தொடரின் இரட்டை சகோதரிகள் நிலா மற்றும் தியாவாக நடிக்கிறார். மௌனிகா இந்த தொடரின் மூலம் தொலைக்காட்சிக்கு அடியெடுத்துவைக்கிறார். இந்த தொடரின் ஹீரோ ப்ரவீனாக நடிகர் அம்ருத் நடிக்கிறார்.
திங்கள் மற்றும் வெள்ளி வரை மதியம் 1.30 மணிக்கு இந்தத் தொடரை கண்டு மகிழுங்கள்.