நாளை (மார்ச் 16) தியேட்டர்கள் ஸ்டிரைக் உறுதி

தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் படங்களைத் திரையிடும் சேவையைக் கொடுக்கு டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் கட்டணத்தை எதிர்த்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக புதிய படங்களை மார்ச் 1 முதல் வெளியிடாமல் உள்ளார்கள்.

புதிய படங்கள் வராததால் தியேட்டர்களை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களும் மார்ச் 16 முதல் தியேட்டர்களை மூடப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.

அதே சமயம், சென்னையிலும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என நேற்று அறிவித்தார்கள். சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் இதை நேற்று அறிவித்தார்.

அதே சமயம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் நாளை முதல் தியேட்டர்களை மூடப் போவது உறுதி என இன்று அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் இன்று சென்னையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

“அரசாங்கத்திற்கு சங்கம் சார்பாக வைத்த கோரிக்கைகளுக்கு அரசிடம் இருந்து இதுவரை எந்த சாதகமான பதிலும் வராததால் நாளையிலிருந்து திரையரங்குகளை காலவரையின்றி மூடுவது என்ற தீர்மானத்தை எடுத்துள்ளார்கள். ஆகவே, அனைத்து திரையரங்குகளும் மறு அறிவிப்பு வரும் வரை மூட உள்ளதாக தலைவர் அண்ணாமலை, செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

Read Previous

‘அவளும் நானும்’, இரட்டை சகோதரிகளின் கதை

Read Next

ஆண் தேவதை – டிரைலர்