தமிழ், தெலுங்கு இரண்டு திரையுலகிலும் முன்னணி நாயகியாக இருப்பவர் சமந்தா.
ஒரே மாதத்தில் அவர் நடிக்கும் மூன்று படங்களின் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்திருக்கிறார்.
மார்ச் 4ம் தேதி தெலுங்கில் அவர் நடிக்கும் ‘ரங்கஸ்தலம்’, மார்ச் 10ம் தேதி தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் ‘சீமராஜா’, இன்று மார்ச் 19ம் தேதி, தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ‘நடிகையர் திலகம்’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடித்துள்ளார்.
ஒரே மாதத்தில் 3 படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் இந்தத் தகவலை சமந்தா பகிர்ந்துள்ளார்.
தற்போது ‘யு டர்ன்’ கன்னடப் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கிலும், விஜய் சேதுபதியுடன் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திலும், அவருடைய கணவர் நாக சைதன்யாவுடன் ஒரு தெலுங்குப் படத்திலும் நடித்து வருகிறார்.
அவர் நடித்து முடித்துள்ள தமிழ்ப் படமான ‘இரும்புத் திரை’ விரைவில் வெளியாக உள்ளது.