ரஜினிகாந்தின் ‘காலா’ வெளியீடு எப்போது ?

பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள ‘காலா’ படம் ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

பிப்ரவரி மாதம் 10ம் தேதி அந்த அறிவிப்பு வெளியானது. ஆனால், அதன் பின் திரையுலகத்தில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. மார்ச் 1 முதல் எந்தப் புதுப் படங்களும் வெளியாகவில்லை. மார்ச் மாத வெளியீடாக சொல்லப்பட்ட படங்களுக்குத்தான், ஸ்டிரைக் முடிந்ததும் வெளியீட்டில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என குரல் எழுந்தது.

அதனால், ‘காலா’ படத்தின் வெளியீடு தள்ளிப் போகலாம் என கடந்த சில நாட்களாகவே ஊடகங்களில் செய்தி வெளிவந்தது. அதனால், ‘காலா’வின் வெளியீட்டுத் தேதி குறித்த குழப்பம் நீடித்தது.

இதனிடையே, படத்தை வாங்கி வெளியிடும் லைக்கா நிறுவனம் ‘காலா’ வெளியீடு பற்றிய ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

“காலா’ வெளியீட்டுத் தேதி குறித்து யாரிடமும், எந்த விதமான தகவலும் பகிரப்படவில்லை. வெளியீட்டுத் தேதி பற்றி எழும் சந்தேகங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல,” எனக் கூறியுள்ளனர்.

‘காலா’ வெளியீடு முன்னர் அறிவிக்கப்பட்டபடி ஏப்ரல் 27ல் வெளியாகுமா ? அல்லது மே மாதம் வெளியாகுமா என்ற சந்தேகம் தொடர்கிறது…

Read Previous

சினிமா ஸ்டிரைக் – ரஜினி பேச்சு தந்த அதிர்ச்சி

Read Next

சீனா ரிலீஸ் – 2000 கோடி வசூலைத் தொடுமா ‘பாகுபலி 2’