2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளிவந்த ‘பாகுபலி 2’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி சுமார் 1700 கோடி ரூபாய் வசூலைப் பெற்றது.
இந்தியாவிலேயே அதிக வசூலைப் பெற்ற படம் என்ற தனிப் பெரும் சாதனையைப் படைத்தது. இந்தியாவில் மட்டும் சுமார் 800 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் சுமார் 900 கோடி ரூபாயும் வசூலித்ததாகச் சொல்லப்பட்டது. மொத்தத்தில் உலக வசூல் 1700 கோடி.
ஆனால், ‘தங்கல்’ படம் சீனாவில் வெளியான பின் அதன் வசூல் 1960 கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்தியாவில் 700 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூலித்த ‘தங்கல்’ சீனாவில் 1000 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி உலக அளவில் இந்தியப் படங்களில் அதிக வசூலைப் பெற்ற படம் என்று முதலிடத்தைப் பிடித்தது.
இப்போது ‘பாகுபலி 2’ படம் சீனாவில் வெளியாவதற்காக சென்சார் சான்றிதழ் பெற்றுவிட்டது. விரைவில் அங்கு படத்தை வெளியிட இருக்கிறார்கள்.
சீனாவில் 300 கோடி ரூபாய் வசூலைத் தாண்டினாலே இந்தியப் படங்களில் முதன் முதலில் 2000 கோடி ரூபாய் வசூலை பெற்ற படம் என்ற சாதனையைப் படைத்துவிடும்.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு சீனாவில் அதிக வசூல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் ரசிகர்களைக் கவர்ந்து அந்த நாட்டில் கொண்டாட்டமாக ஓடிக் கொண்டிருப்பதால் சீனாவில் உள்ளவர்களுக்கும் இரண்டாம் பாகம் அதிகம் ரசிக்க வைக்கும் வாய்ப்புள்ளது