சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு

‘கபாலி’ படத்தில் இடம் பெற்ற ‘நெருப்புடா…’ பாடல் மூலம் புகழ் பெற்றவர் அருண்ராஜா காமராஜ்.

நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர். திரைப்படங்களை இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த நண்பனுக்காக சிவகார்த்திகேயன்ய தயாரிப்பாளராகி அருண்ராஜா காமராஜை இயக்குனராக அறிமுகப்படுத்துகிறார்.

பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் இது. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

படத்தைப் பற்றி அருண்ராஜா காமராஜ் கூறியதாவது,

“இது எனக்கு மிகவும் நெருக்கமான படம், ஏனென்றால் அது வெளிப்படுத்தும் உணர்வுகள் அப்படிப்பட்டவை. சத்யராஜ் சார், இளவரசு சார், ரமா மேடம், முனீஸ்காந்த், அறிமுக நடிகர் தர்ஷன் ஆகியோர் சம்பந்தப்பட்ட முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து இருக்கிறேன். அடுத்தகட்ட படப்பிடிப்பில் தான் கிரிக்கெட் போட்டிகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. அதற்காக நடிகைகளும், கிரிக்கெட் ஆடும் பெண்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மிகவும் சவாலாக இருக்கும் அந்த படப்பிடிப்புக்காக காத்திருக்கிறோம்,” என்றார்.

சிவகார்த்திகேயன், அருண்ராஜா ஆகியோரின் நண்பரான திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Read Previous

நாயை வைத்து ஒரு அட்வென்சர் படம்

Read Next

‘நாடோடிகள் 2’ முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு