விமானம் பற்றி அறிய கல்லூரிக்குச் சென்ற அஜித்

தமிழ்த் திரையுலகத்தில் தொடர்ந்து 25 நாட்களுக்கும் மேலாக புதுப் படங்கள் வெளியாகவில்லை. பத்து நாட்களாக படப்பிடிப்பும் நடக்கவில்லை. நடிகர்களும், நடிகைகளும் நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் அவர்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படி தனக்குப் பிடித்த விஷயத்திற்காகக் கல்லூரிக்குச் சென்ற அஜித் பற்றிய பேச்சுதான் இன்று சமூக வலைத்தளங்களில் டிரென்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கார் ரேஸ் வீரராக இருந்த அஜித், பின்னர் அதை விட்டு விலகினார். அடுத்து சிறிய ரக பொம்மை வடிவிலான விமானங்கள் மீது அவரது கவனம் சென்றது. அது போன்ற விமானங்களை வைத்து ஓட்டிக் கொண்டிருப்பது ஓய்வு நேரங்களில் அவர் செய்யும் செயல்.

மெக்கானிக் விஷயங்களில் சிறுவயதில் இருந்தே சிறந்தவர் அஜித் என்பது பலருக்குத் தெரியாத ஒன்று.

அவருடைய விமான ஆர்வத்தை மேலும் வளர்த்துக் கொள்ள இரு தினங்களுக்கு முன்பு மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரிக்குச் சென்று விமானங்கள் பற்றிய தொழில்நுட்பத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறார்.

அந்த விஷயங்களை அந்தக் கல்லூரி மாணவர்கள் முகப்புத்தகத்தில் வெளியிட்ட பின் இந்த விவகாரம் வெளியில் தெரிய வந்துள்ளது.

ஏரோநாட்டிக்கல் துறையில் குவாட்காப்டர் வேலை செய்யும் விதம் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றைப் பற்றி மாணவர்களிடமும், பேராசிரியர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொண்டுள்ளார்.

அஜித் மிகவும் எளிமையாக நடந்து கொண்டதாக மாணவர்கள் முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளனர்.

Read Previous

விஷால், சூர்யா, கார்த்தி அதிரடி சம்பளக் குறைப்பு

Read Next

காதலரை, வருங்காலக் கணவர் என சொன்ன நயன்தாரா