சீனு ராமசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி

“கூடல் நகர், தென்மேற்குப் பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை” ஆகிய படங்களின் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கி முடித்துள்ள ‘இடம் பொருள் ஏவல்’ படம் இந்த வருடம் வெளிவந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிக்கும் ‘கண்ணே கலைமானே’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். திரையுலக ஸ்டிரைக் முடிந்ததும் இப்படத்தின் மற்ற பணிகள் நடந்து முடிந்து திரைக்கு வரும்.

அடுத்து சமுத்திரக்கனி நாயகனாக நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவதாக இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

சமுத்திரக்கனி பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். அதோடு ‘நாடோடிகள் 2’ படத்தையும் இயக்கி வருகிறார்.

சீனு ராமசாமி, சமுத்திரக்கனி அடுத்து முதல் முறையாக இணைய உள்ளார்கள். இப்படம் பற்றிய மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது.

Read Previous

நடிகையர் திலகம் – டீசர்

Read Next

150 கோடி கடந்த ‘ரங்கஸ்தலம்’ தெலுங்குப் படம்