சுகுமார் இயக்கத்தில் ராம்சரண், சமந்தா மற்றும் பலர் நடித்து கடந்த மார்ச் 30ம் தேதி வெளிவந்த தெலுங்குப் படம் ‘ரங்கஸ்தலம்’.
80களில் நடக்கும் கதைக் களத்தைக் கொண்ட இந்தப் படம் ராம்சரண் நடித்து இதுவரை வெளிவந்த படங்களில் பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது.
இரண்டு வாரங்களில் இப்படம் சுமார் 158 கோடியை வசூலித்துள்ளதாக தெலுங்குத் திரையுலகில் தெரிவிக்கிறார்கள்.
ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டும் 110 கோடிகளும், அமெரிக்காவில் 21 கோடிகளும், கர்நாடகாவில் 14 கோடிகளும், பிற மாநிலங்களில் 13 கோடிகளும் வசூலித்திருக்கிறதாம்.
ராம்சரண் நடித்து ராஜமௌலி இயக்கத்தில் 2009ல் வெளிவந்த ‘மகதீரா’ படம் 150 கோடியை உலகம் முழுவதும் வசூலித்தது. அந்தப் படம்தான் ராம்சரணின் அதிக வசூல் படமாக இதுவரை இருந்தது.
அந்த சாதனையை ‘ரங்கஸ்தலம்’ படம் இரண்டே வாரங்களில் முறியடித்துள்ளது.