‘சீமராஜா’ டப்பிங்கை முடித்த சமந்தா, சூரி

24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரிப்பில், பொன்ராம் இயக்கத்தில் இமான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சீமராஜா’.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படத்திற்கான இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தற்போது படத்தின் டப்பிங் வேலைகளை படத்தின் நாயகி சமந்தா, நகைச்சுவை நடிகர் சூரி ஆகியோர் முடித்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன், இயக்குனர் பொன்ராம் கூட்டணியில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘சீமராஜா’ படத்தில் இணைந்திருப்பதால் இந்தப் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படத்தின் தமிழ்நாட்டு ஏரியா உரிமை வினியோகமும் வியாபார ரீதியாக மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

‘சீமராஜா’ செப்டம்பர் 18ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

Read Previous

பேரன்பு – முதல் பார்வை – வீடியோ

Read Next

‘கடைக்குட்டி சிங்கம்’ – கலகலப்பான காட்சி – வீடியோ