‘வந்தா மல, கோடை மழை, ஸ்கெட்ச், மிக மிக அவசரம், பிச்சுவாகத்தி” உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் ஸ்ரீ பிரியங்கா.
தற்போது ‘ஜெஸ்ஸி’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு சினிமா பத்திரிகையில் ஸ்ரீ பிரியங்காவைப் பற்றி மிகத் தவறான தகவல்களுடன் ஒரு செய்தி வெளியாகியுள்ளதாம். அது பற்றி ஸ்ரீ பிரியங்கா கூறியுதாவது,
“என் வளர்ச்சியைப் பிடிக்காத சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு செய்த வேலை அது என்பதை செய்தியை வெளியிட்ட பத்திரிகை மூலமே தெரிந்து கொண்டேன்.
முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாக்கி விடுகிறேன். நான் எந்த ஒரு தயாரிப்பாளர், இயக்குநர், மேனேஜர் கட்டுப்பாட்டிலும் இல்லை.
எத்தனையோ வாய்ப்புகள் வந்தாலும், என் மனதுக்குப் பிடித்த, எந்தப் பிரச்சினையும் இல்லாத வாய்ப்புகளை மட்டும்தான் நான் ஒப்புக் கொண்டுள்ளேன். படத்தின் பட்ஜெட், ஹீரோ என எதற்காகவும் காம்ப்ரமைஸ் பண்ணிக் கொண்டதில்லை.
திரைத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் சுதந்திரமான நடிகை நான்.