தமிழ் சினிமாவைக் கண்டு பிரமிக்கும் நமீதா பிரமோத்

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்த ‘நிமிர்’ படத்தில் நாயகியாக நடித்தவர் மலையாள நடிகை நமீதா பிரமோத்.

தற்போது மலையாளத்தில் ‘புரொபசர் டின்கன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நமீதா பிரமோத் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘கம்மார சம்பவம்’ படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

திலீப், சித்தார்த் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படத்தில் நமீதா நடித்த ‘பானுமதி’ கதாபாத்திரம் அவருக்கு சிறந்த பெயரைப் பெற்றுத் தந்துள்ளது.

மலையாளத்தில் பெயர் கிடைத்தாலும், தமிழ் சினிமாவைக் கண்டு பிரமித்திருக்கிறேன் என்கிறார் நமீதா.

“திலீப்புடன் மலையாளத்தில் ‘புரொபசர் டின்கன்’ படத்தில் நடித்து வருகிறேன். இது ஒரு மிகப்பெரிய பரிசோதனை முயற்சியாகும். பெரிய அளவில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் நிறைவடைந்துள்ளது. அடுத்தடுத்து கொச்சி மற்றும் துபாய் ஆகிய இடங்களில் படமாக்கப்பட உள்ளது.

நடனத்திலும் திறமைசாலியாக இருக்கும் நமீதா, அது பற்றி கூறுகையில், “சினிமாக்கள் மூலம் தான் நான் நடனம் கற்றுக் கொண்டேன். பிருந்தா மாஸ்டர், ஷோபி பால், தினேஷ் மற்றும் சிலர் மூலம் நடன திறமையை வளர்த்துக் கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

கலை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலும் தமிழ் சினிமா சிறந்து விளங்குகிறது. எங்கள் துறையில் உள்ள மற்றவர்களைப் போலவே, நானும் எப்போதும் தமிழ் சினிமாவின் கிரியேடிவிட்டியை கண்டு பிரமித்திருக்கிறேன்,” என்றார்.

Read Previous

‘சீமராஜா’ மதுரையில் பிரம்மாண்ட இசைத் திருவிழா

Read Next

Seemaraja – Audio Launch Announcement – Video