‘சார்லி சாப்ளிள் 2’ படத்தில் பாடிய செந்தில், ராஜலட்சுமி

அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘சார்லி சாப்ளின் 2’.

பிரபுதேவா, பிரபு, நிக்கி கல்ரானி, அடா சர்மா மற்றும் சந்தனா, அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா, செந்தில், ரவிமரியா, கிரேன் மனோகர், செந்தி, சாம்ஸ், காவ்யா, அமீத், பார்கவ்,கோலிசோடா சீதா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தின் தயாரிப்பாளர் டி.சிவா முக்கிய வேடத்தில் நடிக்க கெளரவ வேடத்தில் வைபவ் நடிக்கிறார்.

ஷக்தி சிதம்பரம் இயக்க, அம்ரிஷ் இசையமைக்கும் இந்தப் படத்தில் ‘சூப்பர் சிங்கர் 6’ போட்டியின் வெற்றியாளரான செந்தில் கணேஷ், அவரது மனைவி ராஜலட்சுமியுடன் இணைந்து அவருடைய முதல் திரைப்படப் பாடலை பாடியுள்ளார்.

இது பற்றி படத்தின் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறுகையில்,

“இது முதல் பாகம் மாதிரியே கலகலப்பான படம். ‘சூப்பர் சிங்கர்’ போட்டியில் முதல் பரிசு வென்ற செந்தில் கணேஷ், அவரது மனைவி ராஜலஷ்மி ஆகியோர் சினிமாவில் முதன் முறையாகப் “சின்ன மச்சான் செவத்த மச்சான், சின்ன புள்ள செவத்த புள்ள” என்ற பாடல் அம்ரீஷ் இசையில் பதிவு செய்யப்பட்டது.

இந்தப் பாடல் செந்தில், ராஜலஷ்மி ஜோடியால் தமிழகம் முழுவதும் கிராமம், நகர்ப்புறம் என்று எல்லா இடங்களிலும் பாடப்பட்டு பிரபலமானது. அந்தப் பாட்டை அவர்களை வைத்தே சினிமாவில் பாட வைத்தோம். அவர்கள் சினிமாவிற்காக முதன் முதலாக பாடிய பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பாடல் காட்சியில், பிரபுதேவா நிக்கி கல்ராணி ஜோடி ஆடிப் பாட பொள்ளாச்சியில் ஐந்து நாட்கள் மிகப் பிரமாண்டமாக படமாக்கப்பட்டது. இந்தப் பாடல் சூப்பர் ஹிட் பாடலாக பட்டி தொட்டியெங்கும் ஹிட்டாகும்,” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்.

விரைவில் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

Read Previous

நடிகர் கரிகாலன் தயாரிக்கும் 10 படங்கள்

Read Next

மோகினி, அறிவியல் – ஹாரர் படம்