அக்டோபர் மாதம் திரைக்கு வரும் ‘பாரிஸ் பாரிஸ்’

ஹிந்தியில் வெளிவந்து வெற்றியையும், வரவேற்பையும் பெற்ற ‘குயின்’ படத்தை மீடியன்ட் நிறுவனம் சார்பாக மனு குமரன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறார்.

தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’, தெலுங்கில் ‘தட் இஸ் மகாலட்சுமி’, கன்னடத்தில் ‘பட்டர்பிளை’, மலையாளத்தில் ‘ஜாம் ஜாம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தமிழில காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, கன்னடத்தில் பருல் யாதவ், மலையாளத்தில் மஞ்சிமா மோகன் ஆகியோர் ‘குயின்’ படத்தில் கங்கணா ரணவத் நடித்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்கள்.

தமிழ், கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த், தெலுங்கில் பிரசாந்த் வர்மா, மலையாளத்தில் நீலகண்டா ஆகியோர் படங்களை இயக்குகிறார்கள்.

இந்த நான்கு படங்களின் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஐரோப்பாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது.

அது பற்றி தயாரிப்பாளர் மனு குமரன் கூறியதாவது, “படத்தின் தரத்தைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அனைத்து நடிகர்களும், அவர்கள் நடிக்கும் கதாபாத்திரங்களின் தன்மையை அறிந்து சிறப்பாக நடித்துள்ளனர். நடிகர்களின் வித்தியாசமான பரிமாணங்ள் கண்டிப்பாக ரசிகர்களைக் கவரும்,” என்றார்.

ஹிந்தியில் இசையமைத்த அமித் திரிவேதி, தென்னிந்திய மொழிகளில் தயாராகும் இந்த நான்கு படங்களுக்குமே இசையமைக்கிறார். பாஸ்கோ – சீசர், கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைக்கின்றனர்.

அக்டோபர் மாதம் இந்தப் படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

Read Previous

ஸ்ரீ ரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் விடுக்கும் சவால்

Read Next

விஜய் டிவியில் ஆரம்பமான ‘கிங்ஸ் ஆப் காமெடி 2’