கலைப்புலி எஸ்.தாணு வழங்க வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் விக்ரம்பிரபு, பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘60 வயது மாநிறம்’.
கன்னடத்தில் வெளிவந்து பெரிய வரவேற்பையும், வசூலையும் பெற்ற ‘கோதி பன்னா சாதாரண மைகட்டு’ என்ற படத்தின் ரீமேக்தான் இந்தப் படம்.
சத்தமில்லாமல் இந்தப் படத்தை தமிழில் எடுத்து முடித்திருக்கிறார்கள். இந்தப் படம் பெருமை கொள்ளும் ஒரு படைப்பு என படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.
“கிழக்கு சீமையிலே’ எனும் கிராமத்து காவியம் வெளிவந்து 25 ஆண்டுகள் கடந்த பின்பு , என் கலையின் தாகத்தை தீர்க்கும் விதமாக, நான் என்றும் பெருமை கொள்ளும் படைப்பாக ‘60 வயது மாநிறம்’ அமையப் பெற்றுள்ளது, எனக்கு மிகுந்த மனநிறைவைத் தந்துள்ளது,” என்று கூறியுள்ளார்.
இந்த ஆகஸ்ட் மாதத்திலேயே படம் வெளியாக உள்ளது.