மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு தமிழ்த் திரைப்பட நடிகர்கள் மட்டுமல்லாது பிற மொழி நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து அவர் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன்
‘பிரார்த்தனை மற்றும் இரங்கல்’ என தமிழில் தலைப்பிட்டு அவருடைய இரங்கலை அமிதாப் தெரிவித்துள்ளார்.
“மரியாதையும், சக்தி வாய்ந்த தலைவருமான கருணாநிதிக்கு எனது பிரார்த்தனை மற்றும் இரங்கல். ‘சாத் இந்துஸ்தானி’ என்ற படத்திற்காக என்னுடைய முதல் தேசிய விருதை அவருடைய கையால் பெற்றேன். அந்த வருடம் அந்த விழா சென்னையில் நடைபெற்றது, அவர்தான் அப்போது முதல்வர்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
T 2893 – பிரார்த்தனை மற்றும் இரங்கல் , for the Honourable and dynamic leader Shri Karunanidhi .. I received my very 1st National Award for 'Saat Hindustani' from him, when the ceremony was held in Chennai that year .. he was the CM ..🙏🙏🙏 pic.twitter.com/lu9Mc886EX
— Amitabh Bachchan (@SrBachchan) August 8, 2018
மலையாள நடிகர் மம்முட்டி
மலையாள நடிகர் மம்முட்டி விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,
“ஈடு செய்ய முடியாத இழப்பு. ஒரு சிறந்த சகாப்தத்தின் முடிவு. எழுத்தாளர், திரை எழுத்தாளர், பேச்சாளர் நமது காலத்தில் இருந்த சிறந்த தலைவர்களில் ஒருவர். ஒரு புரட்சிவாதி. அவை அனைத்தையும் விட, தமிழ் மீதான அவருடைய காதல், தமிழ் மக்கள் மீதான அன்பு மிகவும் உயர்ந்தது. அவருடைய கதாபாத்திரத்தில் மணிரத்னம் படத்தில் நான் நடிக்க வேண்டியது தவறிவிட்டது .சினிமா, அரசியல் இலக்கியம் அவருடனான என்னுடைய சந்திப்புகள் மறக்க முடியா நினைவுகள் கொண்டது. அவருடைய இழப்பு மிகவும் வருத்தமானது,” எனக் கூறியுள்ளார்.
https://www.facebook.com/Mammootty/photos/a.10152286205072774.1073741827.257135417773/10156607833142774/?type=3
மலையாள நடிகர் மோகன்லால்
“ஒரு புகழ் பெற்ற அரசியல்வாதி, ஒரு சினிமா மேதை, சமூக நீதிக்கு போராடியவர். அவை எல்லாவற்றையும் விட சிறந்த மனிதர். தமிழ்நாட்டு அரசியல் அத்தியாத்தை மாற்றி எழுதியவர், இப்போது இல்லை. உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு,” எனத் தெரிவித்துள்ளார்.
A revered politician, a cinematic genius, a fighter for social justice and above all a great human being who redefined Tamil Nadu's political chapter is no more. Strength and Condolences to Kalaignar's family.
Udal mannukku Uyir Thamizhukku! pic.twitter.com/Q1BvhPy88s
— Mohanlal (@Mohanlal) August 7, 2018
மலையாள நடிகர் நிவின் பாலி
“கலைஞர் கருணாநிதியின் மறைவு ஆழமான துயரத்தை ஏற்படுத்தியள்ளது. வலிமையான தலைவர், சிறந்த எழுத்தாளர், எளிமையான மனிதர்,” எனக் கூறியுள்ளார்.
Deeply saddened to hear the demise of Kalaignar M. Karunanidhi. A strong leader, a great writer and a simple human being. You will be missed sir! #RIPKalaignar pic.twitter.com/2CwPFmlyiY
— Nivin Pauly (@NivinOfficial) August 7, 2018
ஜனசேனா கட்சியின் தலைவரும், தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் விடுத்துள்ள அறிக்கையில்
கலைஞர் என்றும் நம் உள்ளத்தில் – @PawanKalyan #RIPKalaignar pic.twitter.com/geMfzINeK9
— JanaSena Party (@JanaSenaParty) August 8, 2018
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன்
கலைஞர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் குலத்தலைவர். 5 முறை முதல்வர், 6 தசாப்த வருடங்களாக அரசியல் வாழ்க்கை, தமிழ்நாட்டு அரசியலின் பீஷ்ம பிதாமகர். திராவிடப் பெருமை,” எனத் தெரிவித்துள்ளார்.
KALAIGNAR . Patriarch of Dravida Munnetra Kazhagam. 5 times CM , 6 Decades Of Political Career , Bhishma Pitamah of TN Politics , Dravidian Pride . Condolences to Family , Followers & every Tamilian . May his soul RIP #Karunanidhi #RIPKalaignar
— Allu Arjun (@alluarjun) August 7, 2018
கன்னட நடிகர் ‘நான் ஈ’ சுதீப்
கலைஞர் கருணாநிதிஜி, தமிழ்நாட்டிற்கு மிகப் பெரும் பங்களித்த, இந்த அற்புதமான தலைவர், மனிதரை இந்த நாடு என்றும் நினைவில் வைத்திருக்கும்.
The country will always remember this Amazing personality and Leader ,,,Kalaignar Karunanidhi ji for his huge contribution to Tamil Nadu.
RIP sir.— Kichcha Sudeepa (@KicchaSudeep) August 7, 2018