கலைஞர் நினைவிடத்தில் த்ரிஷா அஞ்சலி

திமுக தலைவரும், முன்னாள் முதல்வரும், திரைப்படக் கதாசிரியர், வசனகர்த்தாவுமான கலைஞர் கருணாநிதி நேற்று முன் தினம் உடல் நலக் குறைவால் காலமானார்.

அவரது உடல் நேற்று இரவு அண்ணா நினைவிட வளாகத்திற்குள் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக பொதுமக்களின் அஞ்சலிக்காக கலைஞரின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது. அப்போது பல திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்த் திரைப்பட நடிகைகள் பலர் நேற்று அங்கு அஞ்சலி செலுத்த வரவில்லை. நயன்தாரா, த்ரிஷா, சமந்தா, காஜல் அகர்வால், அனுஷ்கா, ஹன்சிகா, சாயிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் இரங்கல் செய்தி மட்டுமே வெளியிட்டனர்.

இந்நிலையில் இன்று காலை கலைஞர உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு நடிகை த்ரிஷா, அவருடைய அம்மா உமாவுடன் வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய த்ரிஷா, “தமிழ்நாட்டிற்கும், தமிழ்த் திரையுலகத்திற்கும் இது மிகப் பெரிய இழப்பு. அவர் பெரிய பேச்சாளர், கவிஞர், எழுத்தாளர், முன்னோடி. இந்த இழப்பு நீண்ட நாட்களுக்கு இருக்கும்,”  என்றார்.

[post_gallery]

Read Previous

கலைஞர் கருணாநிதி உடல் நல்லடக்கம்

Read Next

கலைஞர் கருணாநிதி – மற்ற மொழி நடிகர்களின் இரங்கல்