‘எழுமின்’ படத்திற்காக பாடல் எழுதிய நடிகர் விவேக்

வி.பி. விஜி இயக்கத்தில் விவேக், தேவயானி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘எழுமின்’.

இப் படத்தில் மாணவர்களுக்கு எழுச்சி கொடுக்கும் வகையில் ‘எழு… எழு…’ என்ற பாடலை நடிகர் விவேக் எழுதியுள்ளார்.

இந்தப் பாடலுக்கான ஐடியாவை சொல்லும் போதே, நடிகர் விவேக்கிடம ‘இப்பாடலை நீங்கள் தான் எழுத வேண்டும்’ சொன்னாராம் இயக்குநர் வி.பி.விஜி.

அதனை ஏற்றுக் கொண்ட விவேக், சிறுவர்களையும் இளைஞர்களையும் ஊக்குவிக்கும்படியான பாடலை எழுதிக் கொடுத்திருக்கிறார். பாடலை எழுதி முடித்ததும் இப்பாடலுக்கு அனிருத்தின் குரல் மட்டுமே பொருத்தமானதாக இருக்கும் என்பது நடிகர் விவேக்கின் எண்ணமாக இருந்திருக்கிறது.

அதன்படி, இப்பாடலுக்காக அனிருத்தை இயக்குநர் வி.பி.விஜி தொடர்பு கொண்ட பொழுது, ‘எழுமின்’ கதையைப் பற்றியும் பாடல் வரிகளை பற்றியும் விரிவாகக் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறார்.

அவருக்காக ‘எழுமின்’ டிரெயிலரையும் போட்டு காண்பித்திருக்கிறார்கள்.

அதனைப் பார்த்த அனிருத், “இது வழக்கமான சினிமா அல்ல, சிறுவர்களையும் இளைஞர்களையும் ஊக்குவிக்கும் இப்பாடலை நானே பாடுகிறேன்,” என்று கூறி உடனே பாட சம்மதமும் தெரிவித்திருக்கிறார்.

அனிருத்தின் உற்சாகமான குரலில் அவரது ஸ்டூடியோவிலேயே ‘எழு எழு…’ பாடல் பதிவு நடைபெற்றது.

இதுவரை எத்தனையோ சூப்பர் ஹிட் பாடல்களை அனிருத் பாடியிருந்தாலும் ‘எழு… எழு…’ பாடல் பதிவின் போது “நல்லா வந்திருக்கா, இது நல்லாயிருக்கா” என்று கேட்டு கேட்டு பாடிக் கொடுத்த அனிருத்தின் ஆர்வத்தைக் கண்டு இயக்குநர் வி.பி.விஜியும், நடிகர் விவேக்கும் ஆச்சரியப்பட்டனராம்.

Read Previous

‘டைட்டானிக் காதலும் கவுந்து போகும்’, ஒரு ரொமான்டிக் காமெடி

Read Next

ஜுலை காற்றில்… – காதலின் உரசலும், விரிசலும்…