அறிமுக இயக்குனர் படத்தில் ஜோதிகா

‘ஜோக்கர், காஷ்மோரா, தீரன் அதிகாரம் ஒன்று, அருவி’ ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா நடித்து வரும் ‘என்ஜிகே’ படத்தைத் தயாரித்து வரும் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக ஜோதிகா நடிக்க உள்ள படத்தைத் தயாரிக்கப் போகிறது.

இப்படத்தை அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்க உள்ளார். அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

படத்தின் மற்ற கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

ஜோதிகா தற்போது நடித்து முடித்துள்ள ‘காற்றின் மொழி’ படம் அக்டோபர் மாதம் 17ம் தேதி வெளியாக உள்ளது.

Read Previous

சீமராஜா, நல்ல அனுபவத்தைத் தரும் – பொன்ராம்

Read Next

சீமராஜா – வரும் ஆனா வராது….பாடல் வீடியோ