நயன்தாராவுடன் ‘96’ படம் பார்த்த விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் நேற்று வெளியாகி பலரது மனதிலும் இடம் பிடித்துள்ள திரைப்படம் ‘96’.

இப்படிப்பட்ட ஒரு காதல் படத்தை, தமிழ் சினிமாவின் ‘ஹாட்’ ஆன ஒரு காதல் ஜோடி ஒன்றாக சேர்ந்து பார்த்தால் அதுவும் செய்திதானே.

அந்த காதல் ஜோடி வேறு யாருமல்ல, நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

அவர்களது நண்பர்கள், விஜய் டிவி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி ஆகியோருடன் சேர்ந்து ‘96’ படத்தைப் பார்த்து ரசித்துள்ளார்கள்.

‘96’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகினர் மத்தியிலும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தைப் பார்த்து பலரும் பாராட்டி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் இதுவரை வந்த காதல் படங்களில் இந்த ‘96’ படத்திற்கு தனி இடமுண்டு என்று ஒருசேர தெரிவிக்கிறார்கள்.

Read Previous

வட சென்னை – மாடில நிக்குற மான்குட்டி – பாடல் Promo

Read Next

குடும்பத்தினருடன் ‘பரியேறும் பெருமாள்’ பார்த்த முக ஸ்டாலின்