பா.ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர், ஆனந்தி மற்றும் பலர் நடித்த ‘பரியேறும் பெருமாள்’ படம் 2வது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தை விமர்சகர்கள், ரசிகர்கள், பல்வேறு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பார்த்து வாழ்த்து தெரிவித்து பாராட்டி வருகிறார்கள்.
திமுக தலைவர் முக ஸ்டாலின் இந்தப் படத்தை அவருடைய மனைவி, மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகள் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் சமீபத்தில் பார்த்து ரசித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவும் படத்தைப் பார்த்தார்.
படம் பார்த்த முக ஸ்டாலின் தயாரிப்பாளர் ரஞ்சித்தையும், இயக்குனர் மாரி செல்வராஜையும் பாராட்டினார்.
“தலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை வெகுவாக பாராட்டியிருப்பார். நிறைய வருடங்களுக்குப்பிறகு நான் பார்த்த சிறந்த படம் . திரைப்படக் குழுவினருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று வாழ்த்தினார் முக ஸ்டாலின்.
மேலும் புகைப்படங்கள்…
[post_gallery]