ரசிகர் மன்றங்கள் மூலம் ரஜினிகாந்த், விஜய் உதவி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு திரைப்பட நடிகர்கள் அவர்களது உதவிகளை நேற்று முதல் அறிவித்தனர்.

சிவகுமார், சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் சார்பாக 50 லட்ச ரூபாய்க்கு நிவாரண உதவிகள், விஜய் சேதுபதி 25 லட்ச ரூபாய்க்கு நிவாரண உதவிகள், சிவகார்த்திகேயன் முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்சம், நிவாரண உதவிகளுக்கு 10 லட்சம் என நேற்று அறிவித்தார்கள்.

அதைத் தொடர்ந்து இன்று விஜய் அவருடைய ரசிகர் மன்றம் மூலமாக 40 லட்ச ரூபாய்க்கு நிவாரண உதவிகளை அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாவட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவர்களுக்கு பணத்தை அளித்து அவர்கள் அந்த உதவிகளை பொறுப்பேற்று செய்வார்கள்.

அது போலவே, ரஜினிகாந்த் 50 லட்ச ரூபாய்க்கு அவரது ரஜினி மக்கள் மன்றம் மூலமாக நிவாரண உதவிகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.

மற்ற நடிகர்கள் யாரும் இன்னும் எந்த உதவிகளையும் அறிவிக்கவில்லை.

Read Previous

அமலா பால் ஆக்ஷனில் ‘அதோ அந்த பறவை போல’…

Read Next

சீதக்காதி – டிரைலர்