என்ன சாதி ? பிக் பாஸ் ரித்விகா கடும் கோபம்

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த ‘மெட்ராஸ்’ படத்தில் யதார்த்தமாக நடித்ததன் மூலம் யார் இவர் எனக் கேட்க வைத்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர் ரித்விகா.

அதன்பின் ‘கபாலி’ படத்திலும் குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடித்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆனார். அவருக்குப் பலரும் வாக்களித்து வெற்றி பெற வைத்தார்கள்.

அப்போதிலிருந்தே சமூக வலைத்தளங்களில் ரித்விகா என்ன சாதி  என்ற ரீதியில் பல்வேறு கருத்துக்கள் பரவின. அது இன்னமும் நிற்காமல் இருக்கிறது போலிருக்கிறது.

சற்று முன் தன்னுடைய டிவிட்டரில் கடும் கோபத்துடன் ரித்விகா ஒரு பதிவிட்டுள்ளார். இனியாவது, அப்படிப்பட்ட தேவையற்ற கருத்துக்களை பரப்புபவர்கள் நிறுத்திக் கொள்வார்கள் என எதிர்பார்ப்போம்.

ரித்விகாவின் டிவீட்…

https://twitter.com/Riythvika/status/1068124616860680192

 

Read Previous

2.0 விமர்சனம்

Read Next

சர்வம் தாள மயம் – டைட்டில் பாடல் வரிகள் வீடியோ