500 தியேட்டர்களில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வெளியீடு

சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே தயாரிக்க ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’.

விமல், ஆஷ்னா சவேரி மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படம் டிசம்பர் 7ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் டிரைலர், பாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் வியாபார வட்டாரங்களில் படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.

உலகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படத்தை வெளியிட உள்ளார்கள். கேரளாவில் மிகப் பெரிய நடிகர்களின் படங்கள் கூட 100 தியேட்டர்களுக்குள்தான் வெளியாகும். ஆனால், இந்தப் படம் கேரளாவில் 100க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது.

டிசம்பர் 7ம் தேதி வெளிவர உள்ள படங்களில் இந்தப் படத்திற்குத்தான் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read Previous

பேட்ட – மரண மாஸ்….பாடல் வரிகள் வீடியோ

Read Next

10000 தியேட்டர்களில் சீனாவில் 2.0 வெளியீடு

Most Popular