‘சர்கார்’ சாதனையை முறியடிக்குமா ‘விஸ்வாசம்’ ?

விஜய், அஜித் ஆகியோர் நடிக்கும் படங்களின் டீசர் அல்லது டிரைலர் வெளிவந்தால் இருவரது ரசிகர்களும் யார் சாதனை படைத்தார்கள் என்பதில் சண்டை போட்டுக் கொள்வார்கள்.

இருவரது படங்களும் மாறி மாறி புதிய சாதனை படைத்து வருவது வழக்கம். அது இந்த வருடமும் நடந்திருக்கிறது. விஜய் நடித்து வெளிவந்த ‘சர்கார்’ படத்தின் டீசர் புதிய சாதனைகளை படைத்தது.

நேற்று வெளிவந்த ‘விஸ்வாசம்’ படம் ‘சர்கார்’ பட சாதனையை முறியடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ‘சர்கார்’ படத்திற்காக டிரைலர் வரவில்லை என்றாலும், இரண்டையும் பொதுவாக வீடியோ என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

‘சர்கார்’ படத்தின் டீசர் 4 மணி நேரம் 45 நிமிடத்தில் 10 லட்சம் லைக்குகளைப் பெற்றது. ‘விஸ்வாசம்’ படத்தின் டிரைலர் 10 லட்சம் லைக்குகளைப் பெற 7 மணி நேரம் வரை எடுத்துக் கொண்டது.

‘சர்கார்’ டீசர் 24 மணி நேரத்தில் 1 கோடியே 60 லட்சம் பார்வைகளைப் பெற்றது. ‘விஸ்வாசம்’ டிரைலர் இதுவரை 1 கோடியே 11 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. இன்னும் 5 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வைகளைத் தொட்டால் ‘சர்கார்’ டீசர் 24 மணி நேரத்தில் புரிந்த சாதனையை ‘விஸ்வாசம்’ டிரைலர் முறியடிக்க வாய்ப்புள்ளது.

குறைந்த மணி நேரங்களில் 10 லட்சம் லைக்குகளைப் பெற்ற முதல் தமிழ் சினிமா டிரைலர் என்ற தனிப்பட்ட சாதனையை ‘விஸ்வாசம்’ டிரைலர் நிகழ்த்தியிருக்கிறது. அது போல 24 மணி நேரத்திற்குள் அதற்குக் கிடைக்கப் போகும் பார்வைகளும் தனிப்பட்ட சாதனையாகவே அமையும்.

Read Previous

2018ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்கள்…

Read Next

பொங்கல் படங்கள், விஜய் டிவியில் 4 புதிய படங்கள்