பொங்கல் படங்கள், விஜய் டிவியில் 4 புதிய படங்கள்

2019ம் ஆண்டு பொங்கலுக்கு பெரிய திரையில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘பேட்ட’, அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ நடிக்கும் படங்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

சின்னத் திரையில் பொங்கலுக்கு விஜய் டிவியுடன் வேறு எந்த டிவியுமே போட்டி போட முடியாத அளவிற்கு 2018ம் ஆண்டில் பரபரப்பை ஏற்படுத்திய நான்கு புதிய படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.

‘செக்கச் சிவந்த வானம், சாமி 2, வடசென்னை, பரியேறும் பெருமாள்’ ஆகிய நான்கு படங்கள் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘சாமி 2’ படம் தவிர மற்ற மூன்று படங்களும் சிறப்பான விமர்சனத்தைப் பெற்ற படங்கள். ‘சாமி 2’ ஒரு அதிரடியான ஆக்ஷன் படமாக வெளிவந்தது.

இந்தப் படங்களுக்குப் போட்டியாக மற்ற டிவிக்கள் வேறு எந்தப் படத்தை ஒளிபரப்பினாலும், அது பெரிய வரவேற்பைப் பெறாது என்பது நிச்சயம்.

https://www.facebook.com/VijayTelevision/videos/1180567465430707/?t=31

 

Read Previous

‘சர்கார்’ சாதனையை முறியடிக்குமா ‘விஸ்வாசம்’ ?

Read Next

நெடுநல்வாடை – டீசர்