‘பேட்ட, விஸ்வாசம்’ வசூல், கோலிவுட் ஹாப்பி அண்ணாச்சி

ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாகிறது. அதில் ஏதாவது ஒன்றுதான் ஓடும், மற்றொன்று ஓடாது என்று ‘பேட்ட, விஸ்வாசம்’ படங்கள் வெளிவருவதற்கு முன்பாக கோலிவுட் ஜோசியர்கள், சினிமாவிற்கு சம்பந்தம் இல்லாத ஜோசியர்கள் என பலரும் ஜோசியம் சொன்னார்கள்.

ஆனால், எல்லோரது கணிப்பையும் பொய்யாக்கி இரண்டு படங்களுமே லாபத்தை நிச்சயம் கொடுக்கும் என நான்கே நாட்களில் தகவல் வந்துவிட்டது. இப்போது கோலிவுட் வட்டாரம் மட்டும் அல்லாமல், வினியோக வட்டாரம், தியேட்டர் வட்டாரம் என அனைவரும் ‘ஹாப்பி அண்ணாச்சி’ என்று பொங்கலை பொங்கலோ பொங்கல் என கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.

இருந்தாலும் அவரவர் ரசிகர்களுக்கு யார் படம் வசூல் அதிகம் என்பதில் ஒரு ‘கெத்து’ காட்டத் துடிக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ரஜினியை அஜித் முந்திவிட்டார் என்று அஜித் ரசிகர்கள் கொளுத்திப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

‘பேட்ட’ படம் மீண்டும் ரஜினிதான் உலக அளவில் தமிழ் நடிகர்களில் வசூல் மன்னன் என ‘ஆல் ஏரியா எங்க ஏரியா’ என பட்டையக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு படங்களும் லாபம் தருவது உறுதி, அந்த லாபம் எவ்வளவு என்பதைப் பொறுத்துதான் இருவரில் யார் டாப் என்பதைச் சொல்ல முடியும். அதற்கு இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகலாம்.

Read Previous

‘மகாநதி’ 25வது வருட நினைவுகள் – அருண் வைத்யநாதன் பதிவு

Read Next

தில்லுக்கு துட்டு 2 – டீசர் 2