விஷால் – அனிஷா அல்லா ரெட்டி விரைவில் திருமணம்

தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என இரு பொறுப்புகளில் இருக்கும் நடிகரும், தயாரிப்பாளருமான விஷாலுக்கும், அனிஷா அல்லா ரெட்டி என்பவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

கடந்த இரு வாரங்களாகவே விஷாலுக்கும், ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் என நாளிதழ்களில் செய்திகள் வந்து கொண்டேயிருந்தன.

ஆனால், அவற்றை விஷால் தொடர்ந்து மறுத்து வந்தார். தானே அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை அது உறுதியானதல்ல என்றும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, விஷாலைத் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அனிஷா அல்லா ரெட்டி என்பவர் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நீண்ட தகவலுடன் இருவரும் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

அனிஷா ரெட்டி, அவருடைய இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளப் பக்கத்தில்தான் தன் திருமண செய்தியை வெளியிட்டுள்ளார். அந்தப் பக்கத்தில் உள்ள மற்ற புகைப்படங்களைப் பார்க்கும் போது, அனிஷா இயற்கை ஆர்வலர், மற்றும் பிராணிகள் ஆர்வலர் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

https://www.instagram.com/p/Bsp5-KGgNpd/

அதையடுத்து சமூக வலைத்தளங்களில் இருவரது புகைப்படங்களும் பரவலாகப் பரவி வருகின்றன.

இருப்பினும் விஷால் தரப்பிலிருந்து இன்னும் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

Read Previous

Kadaram Kondan – Teaser

Read Next

காஞ்சனா 3 – மோஷன் போஸ்டருக்கு பிரமாத வரவேற்பு