விஜய் டிவியில் ‘Mr & Mrs சின்னத்திரை’

விஜய் டிவியில் முற்றிலும் பல புதிய நிகழ்ச்சிகள் தொடங்க உள்ளது.

சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருப்பதைப் பார்த்திருக்கிறோம்.

ஆனால், திரைக்குப் பின்னால் அவர்களது திறமை, காதல், அன்பு ஆகியவை எப்படி உள்ளது என்பதைப் பற்றிய நிகழ்ச்சியாக ‘மிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை’ என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சி நாளை ஜனவரி 20 முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும், மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சுற்றும் வெவ்வேறு மாதிரி இருக்கும். இவை அனைத்தும் நட்சத்திர ஜோடிகளின் திறமைகள், காதல், மன உறுதி ஆகியவற்றை வெளிப்படுத்தும் சுற்றுகளாக அமையும்.

மணிமேகலை – உசைன், நிஷா- ரியாஸ், சங்கரபாண்டியன் – ஜெயபாரதி, அந்தோணி தாசன் – ரீட்டா, பிரியா – பிரின்ஸ், சுபர்ணன் – பிரியா, திரவியம் – ரித்து, தங்கதுரை – அருணா, செந்தில் – ராஜலட்சுமி மற்றும் ஃபாரீனா – ரஹ்மான் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களம் இறங்குகிறார்கள்.

பிக் பாஸ் புகழ் விஜயலட்சுமி, நடிகை தேவதர்ஷினி, கோபிநாத் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.

போட்டியாளர்களுக்குள் பல போட்டிகள் நடத்தப்பட்டு இறுதியில் ஒரு ஜோடிக்கு மிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை பட்டம் வழங்கப்பட உள்ளது.

Read Previous

விஜய் டிவியில் ‘கலக்கப் போவது யாரு சீசன் 8’

Read Next

விஜய் டிவி – சிவா மனசுல சக்தி, புதிய தொடர்

Most Popular